ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையணியில் இடம்பெற்றிருந்த 114 ஸ்ரீலங்கா படைச் சிப்பாய்கள் மீது பாலியல் வல்லுறுவு மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஹேய்டியில் ஐநா மேற்கொண்டு வரும் சமாதான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஸ்ரீலங்கா படையினரும் ஐநா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எனினும் அவர்கள் ஐநாவின் விதி முறைகளுக்கு முரணாக ஹேய்டியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளிலும் சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளிலும் ஈடுப்டமை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த துஸ்பிரயோக நடவடிக்கைள் அடிக்கடி இடம்பெற்றுள்ளதாகவும் ஸ்ரீலங்கா படையினர் நிலை கொண்டிருந்த அனைத்து பகுதிகளிலும் இவ்வாறான நடவடிக்கைளில் அவர்கள் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐநா சபை அறிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 114 ஸ்ரீலங்கா படை சிப்பாய்களும் கடந்த நொவெம்பர் மாதமே இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.