சிறீலங்கா பாராளுமன்றின் துணைப் பொதுச் செயலாளரின் இடத்திற்கு முன்னாள் பாராளுமன்றில் பொதுச் செயலாளராக கடமையாற்றிய தம்மிக்க கிதுள்கொட சிறீலங்கா ஐனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பாராளுமன்றின் பொதுச் செயலாளரின் கடமையாற்றி பிரியாணி விஜேயசேகர இன்று ஓய்வு பெற்றுச் செல்லும் இவரின் இடத்திற்கே தம்மிக கித்துள்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
தம்மிக்க கிதுள்கொட 1995ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டு வரை சிறீலங்கா பாராளுமன்றின் பொதுச் செயலாளராக கடமையாற்றியிருந்தார். இவரைத் தொடர்ந்து பிரியாணி விஜேயசேகர இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அரசியல் சாசனபையின் பிரகாரம் பாராளுமன்ற பொதுச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டும். 17வது திருத்தத்தின் படி அரசியல் சாசனசபை அமைக்கப்படாமையால் இப்பதவி வெற்றிடம் இருந்து வந்துள்ளது. தற்போது இவ்வெற்றிடத்திற்கு ஒருவரை சிறீலங்கா அரசாங்கம் தற்காலிகமாக நியமித்துள்ளது.
அரசியல் சாசனசபைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நியமனங்களையும் ஜக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
அரசியல் பேரவைக்கு எதிராக பாராளுமன்ற பொதுச் செயலாளர் நியமிக்கப்பட்டாது, அது பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் செயல் எனவும் ஜக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.