அமைதி நடவடிக்கைக்கு சிங்களவர்களில் 16.6 விழுக்காட்டினர் மட்டும் ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
"அமைதி நம்பிக்கை சுட்டெண் ஆய்வு" என்ற பெயரில் மாற்றுக்கொள்கைகளுக்கான மையத்தால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் போருக்கு சிங்கள மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
முகமாலைக் களமுனையில் சிறிலங்காப் படைத்தரப்புக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு முன்னதாக இக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது
சிறிலங்காவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்துறை முன்னேற்றமாக இருப்பதாகவும் 62.9 விழுக்காடு சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழ், முஸ்லிம் மக்கள் இதற்கு மாறான கருத்தை வெளியிட்டுள்ளனர்.