வத்தளையில் அமைந்துள்ள ஆடைத்தொயிற்சாலையொன்றில் கடமையாற்றும் நானுஓய சமர்செட் தோட்டத்தைச்சேர்ந்த இரு யுவதிகள் உட்டபட மூவர் வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் மூவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்தளையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் அடையாள அட்டை இருந்தபோதிலும் பொலிஸ் பதிவு இல்லை என்ற காரணத்தை முன்வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பின்னர் இவர்கள் வத்தளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டு வெலிக்கடைக்கு அனுப்பப்பட்டள்ளனர்.
இதில் இருவர் நானுஓய சமர்செட் தோட்டத்தைச்சேர்ந்த கந்தசாமி திலகவதி(34),மற்றும் கருப்பையா கமலாதேவி(32)என இனங்காணப்பட்டுள்ளனர். மற்றையவர் கொழும்பைச்சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இது குறித்து நானுஓய பொலிஸாருக்கு வத்தளை பொலிஸார் எவ்வித அறிவித்தல்களையும் தெரியப்படுத்தவில்லையென விசனம் தெரிவித்துள்ள உறவினர்கள் வெலிக்கடை பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்பே விடுதலை செய்யமுடியும் என தெரிவித்துள்ளனர்.