எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதெற்கென விசேட வெளிநாட்டுக் குழுவொன்று இலங்கை வருகை தரவுள்ளது.
20 பேரைக் கொண்ட இந்தக் குழு இம்மாதம் 4ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுடன் அண்மையில் தேர்தல் ஆணையாளர் நடத்திய விசேட பேச்சுவார்த்தைத் தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.இந்தக் குழு மூன்று குழுக்களாக பிரிந்து தேர்தல்களுக்கு முன்னர் தேர்தல் தினமன்று மற்றும் தேர்தல்களுக்கு பின்னரான செயற்பாடுகள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.