01-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
அட்டனில் இன்று இடம்பெறும் மேதினத்தை முன்னிட்டு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்,பொலிஸார் காவல் கடமைகளில் ஈடுப்பட்டனர். அட்டனுக்கு உட்பிரவேசிக்கும் வாகனங்கள் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. டிக்கோயா வழியாக அட்டனுக்கு உட்பிரவேசிக்கும் பயணிகள் பஸ்கள் யாவும் அளுத்கல சந்தியோடு நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பொகவந்தலாவை, நோர்வூட்,மஸ்கெலியா,நோட்டன் பிரிஜ், சாமிமலை, அப்கொட்,ஆகிய இடங்களில் இருந்து அட்டனுக்கு வந்த பயணிகள் சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை நடந்தே அட்டன் நகரை அடைந்தனர்.அதே போன்று தலவாக்கலை ,நுவரெலியா, கினிகத்தேனை பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் மல்லியப்பு சந்தியோடு நிறுத்தப்பட்டன. அட்டன் பஸ் நிலையத்துக்கு அருகில் இ.தொ.காவின் மே தின நிகழ்வுகள் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
|