துண்டாடப்படும் நிலையை அண்மித்து விட்டதாக, கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.கடந்த காலங்களில் ஜே.வி.பி க்குள் தோற்றம் பெற்றிருந்த உள் முரண்பாடுகளுக்கு, இதுவரை தீர்வுகள் எட்டப்படாத நிலையில் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அக்கட்சியின் பிரசார செயலர் விமல் வீரவன்சவுக்கும்,கட்சித் தலைமைத்துவத்துக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் இரண்டு படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜே.வி.பி. யின் பிரசார செயலரும்,அக்கட்சியின் பாரளுமன்ற குழு தலைவருமான வீரவன்சவுக்கு கட்சிக்குள்ளும்,கட்சிக்கு வெளியிலும் இருந்த தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அக்கட்சியில் இருந்து ஒரு டசினுக்கும் உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் திசை தெரியாது அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் குழம்பிப்போய் இருக்கும் ஜே.வி.பி.க்குள் மீண்டும் ஒன்றுபடும் நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும் என தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது கட்சியில் இருந்து தூர விலகி இருக்கும் விமல் வீரவன்ச கட்சித்தலைமைப்பீடம் மே 1ஆம் திகதிக்கு முன்னர் (அதாவது இன்று) இவ் விடயத்தில் தெளிவான முடிவு எடுக்காவிட்டால் கட்சி துண்டாடப்பட்டு புதிய கட்சிக்கான அத்திவாரம் இடப்படும் என தனிப்பட்ட அறிக்கை ஒன்றின் மூலம் நேற்று முன் தினம் அக்கட்சியின் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகி இருந்தன.
இதேவேளை விமல் வீரவன்சவின் அந்த அறிக்கையை தொடர்ந்து பெல்வத்தையில் உள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று கூட்டிய கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா,வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கு அவருக்கு பூரண சுதந்திரம் உண்டு,கட்சியுடன் எந்த நேரத்திலும் அவர் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்,கட்சியில் அவருக்கான கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன,ஆனால் புதிய கட்சியை ஆரம்பிக்கும் பட்சத்தில் கட்சி அவருக்கு வழங்கிய உறுப்புரிமை பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுவதாக தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் சோமவன்ச அணிக்கும்,வீரவன்ச அணிக்கும் இடையில் முற்றிவரும் கருத்துமோதல்கள் விமல் வீரவன்சவை விரைவில் புதிய கட்சியை ஆரம்பிக்க தூண்டலாம்!அதற்கான முன்னெடுப்புகளில் தற்போது வீரவன்ச மும்முரமாக ஈடுபட்டுவருவதாக வீரவன்சவை மேற்கோள் காட்டும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.
இதேவேளை அடுத்து வரும் வாரங்களில் புதிய கட்சிக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வீரவன்ச வெளியிடுவதோடு,புதிய கூட்டணி ஒன்றை அமைத்துக்கொள்ளக்கூடும் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்வுகூறுகின்றன