அரசாங்க ஒத்துழைப்புடனான துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்தும் சிவில் மக்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் பற்றியும் அமெரிக்க அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரியவருகிறது.
2007ம் ஆண்டுக்கான உலகப் பயங்கரவாத அறிக்கை இன்றைய தினம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களதினால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களைப் போஷிப்பது குறித்தும்ää தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கில் இராணுவப்படையினர் அதிகாரத்தை நிலைநாட்டியுள்ள போதிலும்ää விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து கொண்டு நாடு முழுவதிலும் தாக்குதல்களை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்நிறுத்த உடன்படிக்கையொன்று அமுலில் இருந்த போதிலும் அதற்கு முன்னய காலத்துடன் ஒப்பிடும் போது வன்முறைச் சம்பங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2007ம் ஆண்டில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேக சந்தர்பங்களில் இராணுவப்படையினரின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களாகவே விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்குப் பகுதியை அரசாங்கப்படையினர் கைப்பற்றியுள்ள போதிலும் அந்தப் பிரதேசத்தில் அதிகாரப் பகிர்வை மேற்கொண்டுää தேர்தல்களை நடாத்தி பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள அரசாங்கம் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மனித உரமை மீறல் சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வேண்டுமென்றே அமெரிக்க அதிகாரி சென்ற ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகள் மன்னிப்பு கோரியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.