அரசின் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் தொடர்ந்து போராடுவோம் என்று இன்றைய மே நாளில் உறுதியேற்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் க.வே. பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற மேதின நிகழ்வில் அவர் கூறியதாவது:
தொழிலாளர் நாள் என்பது ஓய்வு நாள் அல்ல. எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நாள். அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக குரல் எழுப்பும் நாள்.
எமது மண்ணிலும் பேரினவாத சக்திக்கு எதிராக அதன் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பிப் போராடும் நாளாக உள்ளது. எமது மண்ணில் இலங்கை அரசுகளின் செயற்பாட்டினால் இன்றைய தொழிலாளர் நாளினைக் கூட எமது மக்கள் நலன்புரி நிலையங்களிலும், மர நிழல்களிலும் வாழும் சூழலை உருவாக்கி தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கின்ற செயலில் அரசு ஈடுபட்டுள்ளது.
அரசின் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியை இன்றைய தொழிலாளர் நாள் எல்லோருக்கும் உணர்த் வேண்டும் என்றார்.