இலங்கையின் பணவீக்கம் முன்னொருபோதும் இல்லாதவாறு முடிவடைந்திருக்கும் ஏப்பிரல் மாதம் 25 சதவீதமான அதிகரித்துள்ளது. இதனை புதிய விலைச்சுட்டெண் தெளிவாகக் காட்டியுள்ளது.
அத்துடன் பழைய அளவீடான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் 29.9 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் புள்ளிவிபரவியல் அலுவலகம் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதம் 23.8 சதவீதமாக பணவீக்கம் இருந்ததாக புதிய கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தொகை ஏப்ரலில் 1.8 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.
உணவுப் பொருள்களின் விலை 1.32 சதவீதம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரவியல் தகவல்கள் கூறுகின்றன.