யாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய தனியார் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் தனியார் முதலீட்டு நிறுவனமான ஆதித்யா பிர்லாவு குழுமத்துக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அரசு தாரை வார்த்திருக்கின்றது.
இதனை சிறிலங்காவின் நிர்மாண பொறியியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் செயற்பட வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து மிக விரைவில் இந்தியாவிலிருந்து அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைப் பார்வையிட உள்ளனர்.
இதன் முதற்கட்டமாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள உபகரணங்களை ஆராய்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதற்கான அனுமதியை சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் அனுமதி அளித்துள்ளது.