மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.
மன்னார் திருக்கேதீச்சரம் பகுதியில் இருந்து நேற்று வியாழக்கிழமை மாலை வேட்டையாமுறிப்பு நோக்கி டாங்கி, கவச ஊர்தி மற்றும் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வை விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலின் மூலம் முறியடித்தனர்.