இனப்பிரச்சினைத்தீர்வுக்கான அனைத்துக்கட்சிக்குழு புதிதாக முன்வைக்கவுள்ள யோசனைகளை ஜே வி பி கடுமையாக எதிர்த்துள்ளது.
அனைத்துக்கட்சி குழு இனப்பிரச்சினைத்தீர்வுக்காக ஒற்றையாட்சியின் கீழு சமஸ்டி என்ற யோசனையை முன்வைக்கவுள்ளதாக அனைத்துக்கட்சிக்குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்காக அவரும் சிலரும் அண்மையில’ அயர்லாந்துக்கு சென்று அங்குள்ள தீர்வு முறைமையை அறிந்து வந்தனர். இந்தநிலையில் அனைத்துக்கட்சிக்குழுவின் யோசனைகளில் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கான எவ்வித அடிப்படை அம்சங்களும் இல்லை என ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அயர்லாந்து பிரச்சினை தீர்வானது புரட்டஸ்தாந்து மற்றும் கத்தோலிக்க மதங்களுக்கு இடையிலான பிரச்சினைகான தீர்வாகும் இதனை இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு அம்சமாக ஏற்றுக்கொள்ளமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.