ஊடகவியலாளர் மத்தியில் பீதி நிலவுகிறது என சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட லலித் அதுலக் முதலியின் நினைவு நாளி்ல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஊடகங்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களைச் சொல்லுவோர் தேசத்துரோகிகள் என கூறப்படுகின்றது. அல்லது அவர்கள் மீது கொலை மிரட்ல்கள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது.
ஸ்ரான்டர்ட் பேர்ப்பர்ஸ் நிறுவத்தினம் முத்திரையிடப்பட்டது. லக்பிம பத்திரிகை நிறுவனம் தடை செய்யப்பட்டது.
உதயன், சுடர்ஒளி பத்திரிகை ஊடகவியலாளர்கள் மீது சிறீலங்கா அரச படைகளின் துணைக்குழுக்கள் ஊடாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏபிசி செய்தி நிறுவனத்தின் அலைவரிசைகளை அரசாங்கம் தடை செய்தது.
சண்டேலீடர் நாளேடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்சி தொகுப்பாளர் ரங்கன் மீது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அச்சுறுத்தியமை.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் பொத்தல ஜயந்தவை கடத்த முயற்சி செய்தமை.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் லால் மாவலகேவிற்கு அச்சுறுத்தல்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் துணை நூலகர் ரஞ்சினி அழுத்கே மீதான கத்திக்குத்து.
7 ஊடகவியலாளர்கள் கைது.
அமைச்சர் மேர்வின் சில்வா ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் மீதான தாக்குதல்.
அவுட்ரீச் இணைத்தைச் சேர்ந்த திஸ்ஸநாயகம், ஜசிதரன் அவரது மனைவி கைது நடவடிக்கை.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுரசிறீ கெட்டிகே மீது இரும்புக் கம்பிகள் கொண்டு தாக்கியமை.
ஊடவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படும் மூன்றாவது நாடு இலங்கை என ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார்.