வவுனியா-கெப்பிட்டிகொல்லாவ பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் ஒருவரும், விசேட அதிரடிப்படைச்சிப்பாய் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர்களை இலக்குவைத்தே இந்தக் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, திருகோணமலை புதிய கல்மிலவௌ பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் கிளமோர் தாக்குதொலன்று இடம்பெற்றுள்ளபோதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனத் தெரியவருகிறது.
மணலாறு ஹலம்பெவ பகுதியில் நேற்றிரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இராணுவ வாகனமொன்றை இலக்குவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.