தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் பசறை பிரதேச சபையின் உப தலைவர் உடனடியாக பதவி நீக்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கான இ.தொ.காவின் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதாக அந்தக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இனவாத கொள்கையுடைய பசறை பிரதேச சபையின் உப தலைவர் ரீ.எம். பிரேமதாஸ நடந்து கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.பசறை பிரதேச சபையின் உப தலைவர் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்துள்ளதாக இ.தொ.கா குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த பிரதேச சபையின் உப தலைவர் இனவாத ரீதியில் செயற்படுவதனால் அவர் உடனடியாக பதவி நீக்கப்பட வேண்டும் என ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் காமினி விஜித் விஜேமுனியிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. பசறை பிரதேச சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் உப தலைவரை பதவி விலக்குமாறு அந்தப் பிரதேசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 13 உறுப்பினர்களில் 9 பேர்; முதலமைச்சரிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளனர்.