விமல் வீரவசன்ச தலைமையிலான ஜேவிபியின் மாற்று அணியினர் எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலிகளின் பின்னர் புதிய கட்சி ஒன்று தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யவுள்ளதாக நந்தன குணதிலக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜேவிபியின் மாற்றுஅணியில் இணைந்து கொள்ளவிருக்கும் நந்தன குணதிலக தெரிவிக்கையில்..
புதிதாக உருவாக்கப்படவுள்ள கட்சியில் எதுவித கடும்போக்கும் நிலவாது. அது ரோகண விஜயவீரவின் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையிலேயே உருவாக்கப்படவுள்ளது.
ஜேவிபியில் தற்போது காணப்படும் கொள்கைகளை போல் இல்லாமல் இது ஒரு ஜனநாயக ரீதியான மக்களின் நலன் சார்ந்த கொள்கைகளை முன்னெடுக்கும் எனத் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் புதிய கட்சிய ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக ஜேவிபியின் மாற்று அணியினர் இன்று ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரியசிறீ விக்கிரமநாயக்க தெரிவிக்கையில்...
ஜேவியினருக்கு பிரச்சினைக்குத் தீர்வுகாண வழங்கப்பட்ட காலம் நேற்றுடன் முடிவுற் நிலையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.