தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தினால் 14வது வருடமாக நடாத்தப்படும் பொதுப்பரீட்சை இன்று சுவிஸ் நாடுதழுவியரீதியில் நடைபெற்றது.
4136 மாணவர்களுக்கு 46 பரீட்சை நிலையங்களில் நடாத்தப்பட்ட பொதுப்பரீட்சையில் தமிழ் வித்தியாலயத்தைச்சேர்ந்த 360 இற்கு மேற்பட்ட வித்தியாலயப் பொறுப்பாளர்களும் ஆசிரியர்களும் மேற்பார்வையாளர்களாகக் கடமையாற்றினார்கள்.
இவ்வருடம் நடைபெற்ற பொதுப்பரீட்சையில் தமிழ்க் கல்விச்சேவையில் இணைந்து ஆண்டு 10வரை படித்து சித்தியடைந்து உதவியாசிரியர்களாகச் சேவையாற்றும் 30 இற்கு மேற்பட்ட உயர்கல்வியைக் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களும் மேற்பார்வையாளர்களாகக் கடமையாற்றியமையானது தமிழ்மொழி கற்கும் மாணவர்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விடைத்தாள்கள் மதிப்பீடுசெய்யும் பணிகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படுவதுடன் இம்மாத இறுதிப்பகுதியில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி சுவிஸ் பாடசாலைக்கும் மாணவர் பெற்ற புள்ளிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன என தமிழ்க் கல்விச்சேவை தெரிவித்துள்ளது.




