இலங்கையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதன் பின்னர் இதுவரையில் யுத்த நடவடிக்கைகளினால் 5000 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது.
புலிகளுக்கு எதிரான துணை இராணுவக் குழுக்களுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவதாகவும் இந்த குழுக்களினால் பல கடத்தல்கள்ää காணாமல்போதல்கள் இடம்பெறுவதாகவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த துணை இராணுவக் குழுக்கள் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அநேக சந்தர்பங்களில் சிவிலியன்களை இலத்து வைத்து தாக்குதல் நடத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது. பஸ் குண்டு வெடிப்பு, கிளைமோக் குண்டுத் தாக்குதல்கள் மூலமாக பல சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக 2007ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பயங்கரவாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.