ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
கொழும்பில் பல்வேறு ஆட்கடத்தல்களை மேற்கொண்டமை தொடர்பாக சட்டமா அதிபர் விங் கொமாண்டர் நிசாந்த கஜநாயக்க மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அத்துடன் கஜநாயக்கவுக்கு உதவினர் என்ற அடிப்படையில் மேலும் மூன்று படைவீரர்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் குறித்த சட்டமா அதிபரின் குற்றச்சாட்டு தொடர்பில் விரைவில் கொழும்பு மேல் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த கடத்தல் சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான ஒருவர் பின்னர்அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். கொழும்பு 7 ஜோர்ஜ் வீதியில் வசிக்கும் சீனி முதலாளி எனப்படும் ஸ்ரீஸ்கந்தராஜா என்பரை கடத்திச்சென்று கப்பம் கோரியமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.