காலி மவாட்டம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 24பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு முதல் படையினரும் பொலிஸாரும் இணைந்து மினுவாங்கொடை நகரையும் அதனை அண்டிய பகுதிகளிலேயுமே இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய மற்றும் இப்பகுதிக்கு வந்ததற்கான உறுதிப்படுத்த தவறிய 24பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மினுவாஙகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தேடுதலின்போது கொழும்பில் இருந்து மினுவாங்கொடைக்கு பயணித்துக்கொண்டிருந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் அனேகமானோர் தமிழர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.