ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றால் மூன்று முக்கிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும் என சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்க கூறியுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்றால் மூன்று முக்கிய சட்டங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும்.
1. ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைதல்.
2. யுத்த முன்னெடுப்புகள் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றுதல்
3. சுதந்திரமான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளுதல்
மேற்குறிப்பிட்ட சட்டங்களை நடைமுறைப்படுவது குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவாத்தை நடத்தியுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.