மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் பிள்ளையான் குழுவினர் தேர்தல் திணைக்களத்தின் பெயரைக்கூறி அடையாள அட்டைகளை விநியோகிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இது முற்றிலும் தேர்தல் சட்டத்திற்கு முரணான செயல் என அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் கிராமசேவையாளர்களின் ஊடாகவே விநியோகிப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நாட்டில் இருந்து வெளியேறியுள்ளவர்களின் பெயர்களில் இந்த அடையாள அட்டைகள் பெரும்பாலும் விநியோகிக்கப்படுவதன் காரணமாக தேர்தல் மோசடிக்கு இது பயன்படுத்தப்படும் என ஐக்கிய தேசிய கட்சி அச்சம் வெளியிட்டுள்ளது.
இந்தமுறை கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது அடையாள அட்டைகள் அவசியம் என்ற அடிப்படையில் இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவே ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இதனை பிள்ளையான் குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா மறுத்துள்ளார். அடையாள அட்டைகள் இடம்பெயர்ந்து மீண்டும் குடியமாந்துள்ளவர்களுக்கே விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்