யாழ் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு இன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா யாழ் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் என உயர்நீதிமன்றில் தொடர்ந்த வழக்குவிசாரணையிலேயே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை விடுத்தது.
யாழ் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 454 குடும்பங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியுமென யாழ் மாவட்ட அரச அதிபரினால் இனங்காணப்பட்ட அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை ஆராய்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இனங்காணப்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தவிட்டுள்ளது.