அவிசாவளையிலிருந்து இருந்து கினிகத்தேனை வழியாக நாவலப்பிட்டி பலன்தோட்ட பகுதிக்கு வந்துகொண்டிருந்த வேன் ஒன்று கினிகத்தேனை பகுதியில் 250அடி பள்ளத்தில் வீழந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் கடுங்காயங்களுக்குள்ளான இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றிருக்கின்றது. வேனின் சாரதி நித்திரை கொண்ட காரணத்தினாலேயே இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.