வட மத்திய, வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பரவி வரும் இனம் தெரியாத சிறுநீரக நோய் தொடர்பாக மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் விரைவில் இலங்கைக்கு வருகை தரவள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றபோது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நோய் சம்பந்தமாக அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. இது பற்றி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நோயை இனம் காண்பதற்காக பரிசோதணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக ஆய்வுகளை நடாத்துவதற்காக இங்கு வருகை தரவள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் குழுவில் இலங்கை வைத்தியர் ஒருவரும் சிறுநீரக நோய்க்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் அடங்கியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இந்த நோய்க்கான அடிப்படைக் காரணிகள் எதுவும் இது வரை கண்டறியப்படாத நிலையில் இந்த மாகாணங்களிலுள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா