இலங்கை அரசு பல்வேறு வழிகளிலும்,உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்து வரும் நிலையில்,விடுதலை புலிகளும் வெளிநாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெரிமளவில் வாங்கி வருவதாக தெரிவிக்கபடுகிறது.
அண்மையில் கூட 3, கப்பல்கள் ஆயுதங்களை விடுதலை புலிகள் வடக்கில் உள்ள தமது முக்கிய கடற்தளங்களில் இறக்கி உள்ளதாக கொழும்பு தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி இருந்தன.
இராணுவத்திற்கும்,புலிகளுக்குமிடையில் தொடரும் போர் நாளுக்கு நாள் திகிலூட்டும் வகையில் மாற்றமடைந்து வருவதாகவும்,தற்போது களமுனைகளில் புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால்,பல்வேறு நாடுகளிடமும் இலங்கை அரசாங்கம் ஆயுத உதவிகளை கோரியுள்ள நிலையில் சமீபத்தில் வெலிஓயா, வன்னி மற்றும் யாழ்ப்பாணபகுதிகளில் புலிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் அவர்களுக்கு கணிசமான வெற்றி கிடைத்துள்ளதற்கு, புதிதாக வாங்கியுள்ள அதி நவீன ஆயுதங்களே காரணம் என்றும், இலங்கை அரசால் தற்போது கட்டியம் கூறபடும் அதேவேளை, கடந்த ஒக்டோபரில் புலிகளின் ஆயுத கப்பல் ஒன்றை மூழ்கடித்து விட்டதாக இலங்கை அரசு அப்போது தெரிவித்திருந்தது.ஆனால் புலிகள் வசம் அதி நவீன இறக்குமதி ஆயுதங்கள் வந்திருப்பதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் மூலம்,அரசின் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன என்பது உறுதியாகி உள்ளதாக சிங்கள செய்தி பத்திரிகைகள் சில அரசல்புரசலாக செய்திகளை வெளியிட்டுள்ளன.மார்ச் மாதத்தில் மாத்திரம் மூன்று கப்பல்களில் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை புலிகள் பாதுகாப்பாக தரைஇறக்கி உள்ளதாக இலங்கை இராணுவ உளவு அமைப்பை மேற்கோள்காட்டி அந்த பத்திரிகைகள் இந்த செய்தியை வெளியிட்டுளமை குறிப்பிடதக்கது.