"கிழக்கு மாகாண சபைத் தேர்தல்" என்கின்ற சிறிலங்கா அரசின் தேர்தலானது தமிழீழத் தாயகக் கோட்பாட்டினை சிதைக்கும் ஒரு சதிமுயற்சியே- அதனை முற்றாகப் புறக்கணிப்போம் என்று திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது.
திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை இன்று செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்கின்ற பேரில் சிங்கள இனவெறியரால் நடத்தப்பட இருப்பது தமிழின அழிப்பின் ஒரு உச்சகட்ட செயற்பாடு என்பதனை சகலருக்கும் அறியத்தர விரும்புகின்றோம்.
இத்தேர்தல் நயவஞ்சகம் நிரம்பியதொரு அரசியல் மோசடி.
எமது கண்களை எமது விரல்களைக்கொண்டு அழிக்கும் நரித்தந்திரம் நிரம்பிய நாசாகார முனைப்பு.
தமது மிக நீண்டகால விருப்பினை சிங்களம் நிறைவேற்ற விரும்பும் ஒரு சதி வழிமுறை.
எனவே இத்தேர்தலை முற்றாக புறக்கணித்தல் தமிழ்த் தேசியப்பற்றின் முதன்மைக் கடமை என்பதனை வலியுறுத்துகின்றோம்.
இத்தேர்தலில் எந்த வகையில் தெடர்புபடல்- பங்குபற்றுதல் என்பன எல்லாமே தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்கு அதன் தேசியத்திற்கு செய்யும் பெரும் தீங்காகவே முடியும் என்பதனை உரைத்து இங்கு சொல்கின்றோம்.
சிங்கக்கொடியினை அகற்ற முயன்று இனமானச் சாவடைந்த நடராஜன் மாண்ட திருமலை மண் ஒருபோதும் மாற்றான் சதிக்கு மண்டியிடபது என்பதனை திடத்துடன் உரைக்கின்றோம்.
தமிழீழ மண் ஒருபோதும் பறிபோக அனுமதியோம். அதற்கு துணை போவோரை வரலாறு மன்னிக்காது என்பதனையும் மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கின்றோம்
இத்தேர்தல் என்பது எத்தகைய இரகசிய அரசியல் இழிநோக்கைக் கொண்டது என்பதும் மகிந்த அரசு 2006 இல் தொடங்கிய போரின் நீட்சியாகவே இத்தேர்தல் அமைகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.