வவுனியா பூந்தோட்டம் சந்தியில் செல்வராசா பவான் என்பவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதில் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக வவுனியா - கண்டி வீதியில் இன்று அதிகாலை 5:40 மணியளவில் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காப் படை ஊர்தி ஒன்று கடந்து சென்ற போது கிளைமோர் வெடித்துள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.