சிறிலங்காவுக்கான பிரித்தானியா தூதரகத்தின் படைப் பிரிவு ஆலோசகர் லெப். கேணல் ஏ.எஸ்.காஸ் உள்ளிட்ட பிரித்தானியப் படை அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரை அதிகாரபூர்வமாக சந்தித்துள்ளனர்.
பிரித்தானியப் படை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் யாழ். சென்றனர்.
பிரித்தானியப் படை அதிகாரிகளை பலாலி படைத்தளத்தில் சிறிலங்காவின் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி வரவேற்றார்.
அதன் பின்னர் யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் விவாதிக்கப்பட்டன.
மேலும் சிறிலங்காவின் 51, 53,55 ஆகிய படைப்பிரிவுகளையும் பிரித்தானியக் குழுவினர் பார்வையிட்டனர்.
கொழும்பு திரும்பும் முன்னர் சிறிலங்கா கடற்படையிரையும் பிரித்தானிய படைக்குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய தூதரக படைப்பிரிவு ஆலோசகர் ஏ.எஸ்.காசுடன் பிரித்தானியாவின் லெப்.கேணல் டான் றெக்ஸ், விங் கொமாண்டர் அண்டி லீ ஆகியோர் யாழ். குடாநாட்டுக்குச் சென்றிருந்தனர்.