முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சிறாட்டிக்குளம் கிராம மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் 50-க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பகுதியில் பனங்காமம், கொம்புவைத்தகுளம் ஆகிய கிராமங்களுக்கு தெற்காக சிறாட்டிக்குளம் உள்ளது.
மன்னார்ப் பகுதியில் இருந்து அக்கிராமத்தின் மீது சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.