கிழக்கில் சிறீலங்கா படைகளுடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் ஆயுதக் குழுவிடம் இருந்து ஆயுதங்களைக் களையுமாறு வலியுறுத்தி சிறீலங்கா தேர்தல் ஆணையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு ஆகிய இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன.
சிறீலங்கா தேர்தல் ஆணையாளர் மற்றும் சிறீலங்கா காவல்துறை மா அதிபர் ஆகியோர் குற்றும் சுமத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆயுதக் குழுவுடன் தேர்தல் ஒன்றில கூட்டுச் சேர்ந்து களிமிறங்கியது இதுதான் முதல்தடவை என மக்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் மகிந்த ராஜபக்ச சிறீலங்கா சுதந்திரக் கட்சியை பிள்ளையானுக்கு காட்டிக்கொடுத்துள்ளார் என்றார் மங்கள சமரவீர.
பிள்ளையான் குழுவினரிடம் உள்ள ஆயுதங்களை களைய வேண்டும் என்ற கோரிக்கையும் தேர்தல் ஆணையாளரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.


