எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள என கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கான பொறுப்பான உதவி காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு என 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு தேர்தல் சாவடியிலும் 5 சிறீலங்கா காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நாளன்று அரச வாகனங்கள் இலக்கத் தகடு அற்ற வாகனங்கள் தேர்தல் தொகுதிகளில் நடமாடினால் அவற்றைக் கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என காமினி நவரத்ன மேலும் கூறியுள்ளார்.