இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ள கனடாவின் உலக தமிழர் அமைப்பே நிதியுதவி அளிப்பதாக அந்நாட்டு இரகசிய பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
திரட்டப்படும் நிதி எவ்வாறு புலிகள் அமைப்பின் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வழங்கியுள்ள அறிவுறுத்தல் கடிதத்தையும் கனேடிய இரகசிய காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கனேடிய இரகசிய பொலிஸின் அதிகாரியான ஷெர்லி டெவர்மன் கனேடிய நீதிமன்றில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளதாக திவயின தெரிவிக்கின்றது. 2003 ஜனவரி மாதம் முதல் 2008 பெப்ரவரி மாதம் வரையிலும் 302000 டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.இந்த இரகசிய ஆவணங்களினால் உலக தமிழர் அமைப்பு புலிகளுக்கு சார்பான அமைப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரகசிய ஆவணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கையொப்பம் காணப்படுவதகாவும் தெரிவிக்கப்படுகிறது.