ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
கொழும்பில் தமிழர்கள் கடத்திச்செல்லப்பட்டமை தொடர்பாக முன்னாள் வான்படை விங்கொமாண்டர் நிசாந்த கஜநாயக்க மற்றும் இரண்டு காவல்துறையினர் உட்பட்ட நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொரடப்பட்டுள்ளது. கொழும்பில் 7 இல் வசிக்கும் சீனி இறக்குமதியாளரான யோகராஜ் ஸ்ரீஸ்கந்தராஜ் மற்றும் அவரது வாகன சாரதியான ராமையா ஜெயராஜ் ஆகியோரை 2006 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி கருணா குழுவின் உதவியுடன் கடத்திச்சென்று பொலநறுவை வெலிக்கந்தையில் தடுத்து வைத்து 6 மில்லியன் ரூபாவை கப்பமாக பெற்றமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.