கடந்த இரண்டாண்டு காலப்பகுதியில் இலங்கையில் நிலவும் யுத்தம் காரணமாக சுமார் 5 லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.யுத்தம் காரணமாக கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2008 மார்ச் மாதம் வரையில் 484,650 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக் காட்டுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த 50,725 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை இழந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் உறவினர்களின் வீடுகளிலும் அகதி முகாம்களிலும் தங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது இவ்வாறான 60 அகதி முகாம்கள் இருப்பதாகத் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.