மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியன ஒருங்கே அமையப் பெற்று மிகப் பெரும் சிவாலயமாக இலங்கையில் மிளிர்வது கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயமாகும்.
தென் இந்தியத் திருத்தலங்களுக்கு ஒப்பான முற்றிலும் கருங்கல்லினாலான ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர சிவத்தலத்தில் இன்று காலை 6.25 முதல் உள்ள சுபவேளையில் மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இதனை ஆலய பிரதம குரு, ஊரெழு பிரதிஷ்டாபூஷணம் வை. பாலசுந்தரக்குருக்கள் நடத்தி வைத்தார்.