கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழு 12 முகாம்களை அமைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர், வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, மட்டக்களப்பு கல்லடி, ஆரையம்பதி, கொக்கட்டிச்சோலை, தொப்பிகல மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினர் முகாம்களை அமைத்துள்ளதாகத் தெரியவருகிறது.அநேகமான முகாம்கள் இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் முகாம்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.