மன்னாரில் விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இரு வேறு முனைகள் ஊடான முன்னேற்றமுயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
இந்த முறியடிப்புத் தாக்குதலில் ஒன்பது சிறிலங்காப் படையினர் ஸ்தலத்திலோ கொல்லப்பட்டதாகவும் மற்றும் விடுதலைப்புலிகளின் கண்ணிவெடிகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
சிறிலங்காப் படையினர் மன்னார் போர்முனைகளான கறுக்காய்குளம், திருக்கேதீஸ்வரம், வேட்டைமுறிப்பு ஆகிய படைத்தளங்களிலிருந்து கவசவாகனம் சகிதம் ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைத் சூட்டாதரவுடன் முன்நகர்வை மேற்கொண்டனர்.
இந்த முன்னேற்ற முயற்சி காலை 5.30 மணியளவில் திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து வேட்டைமுறிப்பு நோக்கி நகர்வை முன்னெடுத்தனர். இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் வழிமறித்து தாக்குதல் தொடுத்தனர். முறியடிப்புத்தாக்குதல் நண்பகல் 12.00 மணிவரை நீடித்தது.
இந்த படைநடவடிக்கை காலை 8.15 மணிக்கு கறுக்காய் குளத்தில் இருந்து வட்டகண்டல் நோக்கி நகர்வை மேற்கொண்டனர். படையினரின் நிலைகளில் இருந்து செறிவான ஆட்லெறி மோட்டார் தாக்குதல்களை நடத்தினர். இதனுடன் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் படையினர் நடவடிக்கையை மேற்கொண்டனர். படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சண்டைகள் உக்கிரமடைந்திருந்தன.
காலை 10.00 மணியளவில் படையினருக்கு ஆதரவாக யுத்த ராங்கிகள், கவசவாகனங்கள் தாக்குதல்களின் ஈடுபட்டன. விடுதலைப்புலிகள் முன்நகரும் படையினர் மீது தாக்குதல்களை நடத்திய சமநேரத்தில் படைக்கவசங்களையும் எதிர்த்தாக்குதல்களையும் நடத்தினர்.
படையினருக்கு ஆதரவாக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கவசவாகனம் ஒன்று விடுதலைப்புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி முற்றாக அழிவடைந்துள்ளது. இத்தாக்குதல்களில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவான படையினர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு நடவடிக்கைகளிலும் படையினருக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகக் களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.