புலிகளின் முக்கிய தளமாகக் கருதப்படும் வவுனியா பாலம்பிட்டிப் பிரதேசத்தை கடும் சமரின் பின்னர் படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.
இப்பிரதேசத்தில் படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல் காரணமாக புலிகள் தரப்பில் பலத்த சேதங்கள் ஏற்பட்ட அவர்கள் பின்வாங்கிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 5 புலிகள் கொல்லப்பட்டதாக புலிகளின் தொடர்பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை மணல்ஆற்றுப் பிரதேசத்தில் முன்னேறும் இராணுவத்தினருக்கு ஆதரவாக நேற்று விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது