கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள்; இன்று (07) நள்ளிரவுடன் முடிவடையுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் கிழக்கு மாகாணத்திற்கு 37 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,342 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் 18 அரசியல் கட்சிகளும்; 73 சுயேச்சைக் குழுக்களும் களத்தில் குதித்துள்ளன. வாக்களிப்புக்காக சுமார் 1,022 நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு நடவடிக்கைகளை சர்வதேச கண்காணிப்பாளர்கள் மேற்பார்வை செய்வர்