ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவால், பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒரு மாத காலத்துக்கு ஒத்தி வைக்கபட்டுள்ளது தொடர்பாக,ஐ.தே.க.யினர் இன்று காலை 10.00 மணியளவில் பாராளுமன்ற கட்டிடதொகுதியில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்
. இச்சந்திப்பில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க-பாராளுமன்ற கூட்டதொடரை ஜனாதிபதி தன்னிச்சையாக ஒத்திவைத்துள்ளமை,பாராளுமன்றத்தை இழிவுபடுத்தும் செயலாகும்.பாராளுமன்ற ஒத்திவைப்பு குறித்து எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் அரசாங்கம் எனக்கு தெரியபடுத்தவில்லை.இது அரசாங்கத்தின் சர்வாதிகர போக்கை வெளிபடுத்துகிறது.இன்று அரசாங்கத்துக்கு பாராளுமன்றம் முக்கியமில்லை.
பிள்ளையான் குழுவே முக்கியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.கட்சியின் பொது செயலாளர் திஸ்ச அத்தநாயக்க உரையாற்றுகையில்-கிழக்கு தேர்தலில் அரசாங்கம் தோற்கடிக்கபடலாம்,இது தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பபடும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சத்திலேயே அரசாங்கம் பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.திஸ்ச அத்தநாயக்கவை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸுமன் கிரியெல்லே உரையாற்றுகையில் ஜனாதிபதியின் இத்தகைய செயற்பாட்டினால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.