மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியிலிருந்து கவச ஊர்திகள் சகிதம் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் இன்று புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் படையினர் மேற்கொண்டனர்.
நண்பகல் 12:00 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலையடுத்து படையினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
மீண்டும் மாலை 5:00 மணியளவில் தாக்குதலை படையினர் மேற்கொண்டனர்.
இத்தாக்குதலையும் விடுதலைப் புலிகள் முறியடித்தனர்.
இன்றைய முறியடிப்பு நடவடிக்கைகளில் படையினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.