ஓரே இலங்கை என்ற கொள்கையின் அடிப்படையிலான தீர்வுத் திட்டங்களின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்பட முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் இந்திய மாநில முறைமையைப் போன்றதொரு தீர்வுத் திட்டமே சாலச் சிறந்ததெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்துச் செல்லும் பிரிவிணைவாதத்தை கைவிடுமாறு அவர்களுக்கு சர்வதேச சமூகம் அழுத்தங் கொடுக்க வேண்டும் என ஆனந்த சங்கரி வெளிநாட்டு தூதுவர்களுக்கு கடிதமூலம் அறிவித்துள்ளார்.
வடக்கு பிரச்சினைக்கு திர்வுபெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் மட்டும் சர்வதேச சமூகம் அழுத்தங்கொடுப்பதில் அர்த்தமில்லை என அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் வாழும் அரைவாசிக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களப் பெரும்பான்மை மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் சமாதானமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வருவதாக ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.