தபால் மூல வாக்களிப்பிற்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெறாத அரசாங்க உத்தியோகத்தர்கள் சிலர் தேர்தல் கடமைகளிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.
தபால் மூலம் வாக்களிப்பது தொடர்பான விண்ணப்படிவங்கள் உரிய நேரத்தில் உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என மஹாஓய அரச உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாஹை மாவட்டம் மஹாஓய பிரதேசத்தின் வலயக் கல்விக் காரியாலயம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றில் கடமையாற்றும் 100 பேருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரியவருகிறது.
மஹாஓய பிரதேசத்தில் அதிக தபால் மூல வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மஹாஓய அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அம்பாறை உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.