கொழும்பில் சிறீலங்கா அதிபரின் செயலகத்திற்கு முன்பாக வேலையில்லாப் பட்டதாரிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மகிந்த சிந்தனையின் கீழ் தயாரிக்கப்பட்ட செலவுத் திட்டத்தின் கீர் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்திருந்தது. இந்தநிலையில் தமக்கு வேலை மற்றும் ஆசிரியர் பரீட்டை முடிவுகளை வெளியிடுமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது வேலையில்லா பட்டதாரிகள் பாதயாத்திரை மூலம் சிறீலங்கா அதிபரின் செயலத்திற்குச் செல்லும் போது சிறீலங்காக் காவல்துறையினரால் தடைகள் போடப்பட்டு ஆர்ப்பாட்டக்காரரை உட்செல்லவிடாது தடுத்துள்ளனர்.