வவுனியாவில் வணிக நிலையம் ஒன்றில் பொதுமகன் ஒருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் வணிக் நிலையமஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் இவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.
கொல்லப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாஸ்கரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று வவுனியாவில் துணை இராணுவுக் குழுவான புளொட் அமைப்பினால் கடையடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்த நிலையில் திறந்திருந்த வணிக நிலையத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த ஆயுததாரிகளே இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.