வன்னிக்களமுனையில் மணலாறிலும், மன்னாரிலும் நேற்றைய நாள் இடம்பெற்ற மோதல்களில் 10 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
மணலாறில்...
மணலாறு ஜனகபுரப் பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதலில் 3 படையினர் காயமடைந்துள்ளனர்.
மன்னாரில்...
ஆலங்குளத்தில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
நெடுங்கண்டல் பகுதியில் நேற்று பிற்பகல் 2:05 மணிக்கு இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
அடம்பன் அயல் பகுதியில் 4 படையினர் காயமடைந்துள்ளனர்.
பாலம்பிட்டியில் இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.