தெல்தெனியா அம்பகோட்டை பகுதியில் குண்டுப் புரளி காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அம்பகோட்டைப் பகுதியில அமைந்துள்ள வீடு ஒன்றில் 12 கிலோ எடையுள்ள குண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குணடு செயலிழக்கும் பிரிவினர் குண்டு கண்டுபிடிக்கும் கருவி, மோப்ப நாயய்கள் சகிதம் அப்பகுதிக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதி முழுவமும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டை துருவித் துருவி ஆயாராந்த பின்னர் குண்டு எனக் கூறப்பட்ட பொரும் குண்டு அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது இயந்திரம் ஒன்றின் வெப்பத் தணிக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளது.