துணைப்படை இராணுவக் குழுவான பிள்ளையான் குழு பாணமைப் பிரதேசத்தில் இரண்டு முகாம்களை அமைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாணமையில் அமைந்துள்ள ஒக்கந்த விகாரைக்கு அண்மையில் இந்த இரு முகாம்களும் அமைக்கப்பட்டுள் வருகின்றன.
இப்குதியில் வயது குறைந்த சிறார்கள் ஆயுதங்கள் தரித்த நிலையில் முகாமைங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு வேளைகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் செவிமடுக்கப்படுகின்றன. அத்துடன் முகாம் அமைக்கப்படும் பகுதிக்குள் எவரும் செல்லக்கூடாது என பிள்ளையான் குழுவினர் மக்களை எச்சரித்தும் உள்ளனர் என குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.